Wednesday, January 6, 2010

அருட்பெரும்ஜோதி அகவல்

அருளலாது அணுவும் அசைந்திடாது அதனால்
அருள்நலம் பரவுகென்று அறைந்தமெய்ச்சிவமே
அருளுறின் எல்லாம் ஆகும் ஈது உண்மை
அருளுற முயல்கவென்று அருளியசிவமே
அருள்நெறி ஒன்றே தெருள்நெறி மற்றெலாம்
இருள்நெறி யென எனக்கு இயம்பிய சிவமே
அருள்பெறில் துரும்பும் ஓர் ஐந்தொழில் புரியும்
தெருளிது எனவே செப்பிய சிவமே


Thursday, December 10, 2009

வள்ளலார் பாடல்கள்

காற்றாலே புவியாலே ககனம் அதனாலே
கனலாலே புனலாலே கதிராதியாலே
கூற்றாலே பிணியாலே கொலைக் கருவியாலே
கோளாலே பிறஇயற்றும் கொடுஞ் செயல்களாலே
வேற்றாலே எஞ்ஞான்றும் அழியாதே விளங்கும்
மெய்யளிக்க வேண்டுமென்றேன் விரைந்தளித்தான் எனக்கே
ஏற்றாலே இழிவென நினையாதீர் உலகீர் எந்தை
அருட் பெருஞ்ஜோதி இறைவனைச் சார்வீரே

Wednesday, December 9, 2009

திருப்பள்ளிஎழுர்ச்சி

பொழுது விடிந்ததென் உள்ளமென் கமலம்
பூத்தது பொன்னொளி பொங்கிய தெங்கும்
தொழுதுநிற் கின்றனன் செய்பணி யெல்லாம்
சொல்லுதல் வேண்டுமென் வல்லசற் குருவே
முழுதுமா னான் என ஆகம வேத
முறைகளெ லாமொழி கின்றமுன் னவனே
எழுதுத லரியசீர் அருட்பெரும்ஜோதி
என்தந்தை யேபள்ளி எழுந்தருள் வாயே






Tuesday, November 24, 2009

திருக்குறள்

கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிரும் தொழும்

ஞான சரியை

நினைந்து நினைந்து உணர்ந்து உணர்ந்து நெகிழ்ந்து நெகிழ்ந்து அன்பே
நிறைந்து நிறைந்து உற்று எழும் கண்ணீர் அதனால்
உடம்பு நனைந்து நனைந்து அருள் அமுதே நன்னிதியே ஞான
நடத்தரசே என் உரிமை நாயகனே யன்று
வனைந்து வனைந்து யேதுதும் நாம் வம்மின் உலகியலீர்
மரணமிலா பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர்
புனைந்துரையேன் பொய்புகலேன் சத்தியம் சொல்கின்றேன்
பொற்சபையில் சிற்சபையில் புகும் தரும் இதுவே.